காதலா....நட்பா.???
எனக்கு மிகவும் பழக்கமான ஒரு டெய்லர்கிட்ட கேட்டேன் "அண்ணே,,,, காதலுக்கும் நட்புக்கும் என்னணே வித்தியாசம்" னு கேட்டேன்.
அதற்கு அவர் தனது தொழில் ரீதியில் ஒரு பதிலை சொன்னார்.
"தம்பி,,,,காதல்என்பது ஒரு "வெள்ளைச் சட்டை(White Shirt)" மாதிரி.சின்னதா ஒரு கரை இருந்தாக் கூட,அதை பார்த்தவுடனே நாலு பேருக்கு தெரிஞ்சிடும்.அது மாதிரி தான் லவ்வும்.காதல்ல சின்ன பிரச்சனை வந்தாலும்,நாலு பேருக்கு தெரிஞ்சிடும்.
ஆனால் நட்பு அப்படி இல்லை.நட்பு என்பது "கருப்புச் சட்டை (Black Shirt)" மாதிரி.அதை நீ சாக்கடைல முக்கி எடுத்தாலும்,கரையாருக்குமே தெரியாது.அது மாதிரி தான் நட்புக்குள்ள எவ்ளோ பெரிய சண்டை வந்தாலும் அது வேற எவனுக்குமே தெரிய வாய்ப்பிருக்காது."
நட்பு தான் என்றுமே சிறந்தது..!