HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat
-- Hi Guest Welcome To HeavenTamilChat --

** Register our Nick and Stay with Here **


WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeCalendarFAQSearchRegisterLog inEnter Chat
Latest topics
» HEAVEN TAMIL CHAT
Sat 09 May 2015, 8:58 am by maker_killer

» What Is Saffron Good For?
Wed 31 Dec 2014, 10:34 am by -Lovekiller-

» What Is Dragon Fruit Good For?
Wed 31 Dec 2014, 10:18 am by -Lovekiller-

» What Is Fenugreek Good For?
Wed 31 Dec 2014, 10:13 am by -Lovekiller-

» What Is Wasabi Good For?
Wed 31 Dec 2014, 10:01 am by -Lovekiller-

» What Is Tamarind Good For?
Wed 31 Dec 2014, 9:55 am by -Lovekiller-

» Happy New Year
Wed 31 Dec 2014, 9:25 am by -Lovekiller-

» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **
Wed 24 Dec 2014, 12:05 am by -KinG-

» ** Master Password Site to centralise all your passwords from email to Banking **
Fri 19 Dec 2014, 10:02 pm by -KinG-

Top posters
-Lovekiller-
 
-RoMeO-
 
Adangathavan
 
SamSmile
 
-KinG-
 
Baby_Doll
 
HeaveN
 
AppavII
 
Admin
 
ding_dong
 
Search
 
 

Display results as :
 

 


Rechercher Advanced Search
August 2017
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
CalendarCalendar
Click "Like" Button To Join
Keywords
music

Share | 
 

 60 வயது கடந்த பின் காதல் டூயட் பாடியது கடவுள் கொடுத்த தண்டனை: ரஜினி பேச்சு

View previous topic View next topic Go down 
AuthorMessage
-Lovekiller-

avatar

Posts : 319
Join date : 2014-12-08
Age : 27
Location : Klang

PostSubject: 60 வயது கடந்த பின் காதல் டூயட் பாடியது கடவுள் கொடுத்த தண்டனை: ரஜினி பேச்சு   Tue 09 Dec 2014, 7:24 pm

நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'லிங்கா' திரைப்படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் லிங்கா படத்தின் தெலுங்கு பதிப்பின் அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, கதையாசிரியர் பொன் குமரன், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, கே. விஸ்வநாத், ஜெகபதி பாபு, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குனர் திரி விக்ரம் சீனிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், நான் நான்கு வருடங்களுக்கு மேல் படங்களில் நடிக்கவில்லை. இடையில் கோச்சடையான் வெளியானது. ஆனால் அது அனிமேஷன் படம். அதனால் நேரடி படம் ஒன்றில் நடிக்க ஆர்வம் இருந்தது. அந்த சமயத்தில் தான் லிங்கா படத்தின் கதை பற்றி சொன்னார் கே.எஸ். ரவிக்குமார். 6 மாதத்தில் முடிப்பதாக இருந்தால் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன். கே.எஸ். ரவிக்குமார் அந்த சவாலை ஏற்று படத்தை ஆறு மாதத்திலேயே முடித்து விட்டார்.

அதுவும் பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள், பெரிய நட்சத்திரங்கள் எல்லோரும் இருந்தும் படத்தை திட்டமிட்டபடி முடித்தது பெரிய சாதனை. எனக்கும் இது சவாலான படம். திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ். ரவிக்குமாரை பாராட்டுகிறேன்.

என்கு லிங்கா படம் சவாலாக இருந்து .சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சோனாக்ஷி சின்ஹாவை சிறு வயதிலேயே தெரியும். என் மகள்களுடன் வளர்ந்தவர். அவரோடு காதல் டூயட் பாட வேண்டும் என்றதும் வெட வெடத்து போனேன்.

நான் அறிமுகமான முதல் படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கூட இப்படி ஆனது இல்லை. அவரோடு சேர்ந்து ஆட ரொம்ப சிரமப்பட்டேன். அவருக்கு இணையாக என் தோற்றத்தை மாற்ற மேக்கப் மேன் காஸ்ட்யூம் நிபுணர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.

60வயதை கடந்த என்னை இப்படி டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த மிகப் பெரிய தண்டனை. ஓடும் ரெயிலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை யெல்லாம் விட சோனாக் சியுடன் டூயட் பாடுவது சிரமமாக இருந்தது.

இவ்வளவுக்கும் நடுவில் திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ். ரவிக்குமாரை பாராட்டுகிறேன். ஹாலி வுட்டிலும் இது போன்ற பிரமாண்ட படங்கள் நிறைய வருகின்றன. அவற்றை முடிக்க நிறைய காலம் எடுக்கிறார்கள்

பாகுபலி படம் மூலம் ராஜமௌலி இந்தியாவிலேயே நம்பர் ஒன் இயக்குனராக வலம் வருவார். ஏனெனில் படத்தைப் பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டதினால் சொல்றேன். எனக்கும் ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆசை உள்ளது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். என இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
Back to top Go down
 
60 வயது கடந்த பின் காதல் டூயட் பாடியது கடவுள் கொடுத்த தண்டனை: ரஜினி பேச்சு
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
HeavenTamilChat: No 1 Tamil Voice and Video Chat :: .:: Cinema ::. :: .:: Cinema News ::.-
Jump to: